அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சபாபதி மகன் அன்பழகன் என்பவர் தனது வீட்டின் கூரையை மாற்றி அமைக்க வேண்டி அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து வீட்டின் கூரையை பிரித்து அகற்றிக் கொண்டிருந்த போது
ஏற்கனவே மழையில் நனைந்து ஊறிய நிலையில் இருந்த மண்சுவரானது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் அன்பழகன், ராமச்சந்திரனும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மண் சுவற்றை அகற்றி அவர்கள் இருவரையும் மீட்டபோது

ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய அன்பழகனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். மண் சுவர் இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.மதுக்குமார்.

