திருவோணம்,அக்.16 – தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி, உள்ளிட்ட 6 பேர் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், (ஊராட்சிகள்)வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நின்ற ஒப்பந்தக்காரர் ஒருவரின் காரை சோதனை செய்தனர் மேலும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் செல்போன்களை கைப்பற்றி விசாரணை செய்தனர் , ஒப்பந்தக்காரரை விசாரணை நடத்திய போது, அவரிடம் சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 600 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர் மேலும் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒவ்வொரு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி பணம் எதுவும் லஞ்சமாக பெற்றுள்ளனரா? என சோதனை செய்தனர் மேலும் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் மேலும் நள்ளிரவு 1 மணி வரை விசாரணை நடைபெற்றது,