தஞ்சை காமாட்சி ஹாலில் தஞ்சை மாநகராட்சி சார்பில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதற்கான வேலைகளை வருவாய்த்துறையினரும் தஞ்சை மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து மேற்கொண்டனர் ஆனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மதியம் வரை யாருமே கலந்து கொள்ளாமல் இருப்பது அதிகாரிகளை கலக்கமடைய செய்துள்ளது.

மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிற நிலையில் யாருமே முகாமில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதிகாரிகள் மக்களிடம் தகவலை கொண்டு சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
செய்தி – வெற்றி.