Wednesday, October 15, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு.

திருச்சி, அக்டோபர். 15, 2025: நமது பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி – சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில், மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே, தனது புதிய ஷோரூமை இன்று திறந்தது. அந்தப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்திற்கான தீபாவளி ஷாப்பிங்கை ஒரே இடத்தில் செய்யும் வகையில் ஏராளமான ஆடை ரகங்களுடன் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது.

புதிய ஷோரூமை ரம்பா தியேட்டர் நிறுவனர் என். மாணிக்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் மற்றும் திருச்சி மாவட்ட எக்ஸ்னோரா துணைத் தலைவர் கலாவதி சண்முகம் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். முதல் விற்பனையை தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை திருச்சி ஜூவல்லரி சங்க தலைவர் விஜயராகவன் பெற்றுக் கொண்டார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், தீபாவளிக்கு முன்னதாக திருச்சியில் ஒரு ஷோரூம் திறப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. பண்டிகை காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் அதே வேளையில், பாரம்பரியம் மாறாத அதேசமயம் நவீன ஆடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திருச்சி எப்போதும் எங்களை அன்புடன் வரவேற்றுள்ளது, தீபாவளி ஷாப்பிங்கை குடும்பத்தில் உள்ள பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களின் இந்த ஷோரூம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

இங்கு பிராண்டின் சின்னமான வெள்ளை வேட்டிகள் மற்றும் சட்டைகள் முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் வரை ஏராளமாக உள்ளன. திறப்பு விழாவில் ராம்ராஜ் காட்டன் தலைவர் கே.ஆர். நாகராஜன், சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் ஜாக்கார்டு பார்டர்களுடன் கூடிய பிரீமியம் துணிகளில் வடிவமைக்கப்பட்ட வேட்டி-சட்டைகளின் கிராண்ட் கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தினார். ஸ்கை ப்ளூ, கோல்ட், மோஸ் கிரீன் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஆடைகள், பண்டிகையை உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டு உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments