Thursday, October 9, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedமீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 சவரன் நகை திருடியவர்கள் கைது.

மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 சவரன் நகை திருடியவர்கள் கைது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் கடந்த 09.10.2024 அன்று தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இந்நிலையில் 10.10.2024 வீட்டின் கதவு உடைந்து திறந்து இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ராமலிங்கம் வீடு திரும்பி பார்த்தபோது அவரின் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு 36 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், திருடு போனது. கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி Iஉத்தரவின்படி, ஜெயங்கொண்ட உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி வழிகாட்டுதலில் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்தனர்.

புலன் விசாரணையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் ,ஆகியோர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் 23.09.2025 ந்தேதி கைது செய்து, திருடு போன 20 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் திருட்டிற்கு உபயோகித்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதில் மணவாளன் மீது நாகப்பட்டினம் கடலூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 28 வழக்குகளும், ஆகாஷ் மீது நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து 23.09.2025 ந்தேதி இருவரையும் மீன்சுருட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் இவ்வழக்கு குறித்த புலன் விசாரணை தொடர்கிறது. மிக துரிதமாய் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments