பட்டுக்கோட்டை திமுக என்றாலே அக்கப்போருக்கு குறைவிருக்காது மாவட்டச் செயலாளராக யார் வந்தாலும் அந்த கட்சியினரை திருப்தி படுத்த முடியாது போல, ஏனாதி பாலுவிடம் தொடங்கி அண்ணாதுரையை கடந்து தற்போது புதிதாக பதவிக்கு வந்த டி.ஆர்.பாலின் ஆதரவாளரான பழனிவேல் வரை தொற்றிக் கொண்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் இவருடைய பெயரும் சர்ச்சைகளில் வலம் வருவது தொடர்கதை ஆகிவிட்டது. கட்சியினர் இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என கழகம் ஏற்படுத்திய நிலையில் என்ன நடக்கிறது தஞ்சை தெற்கு மாவட்டத்தில் யார் இந்த பழனிவேல் என்னதான் செய்கிறார் ஏன் இவருக்கு இவ்வளவு எதிர்ப்பு என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.
வாழ்க்கையில் ஒரு முறை தான் ஒருவருக்கு சுக்கிர திசை அடிக்கும் என்பது நமது முன்னோர்களின் வழக்கமான சொல் அது இப்போது தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேலுக்கு அடித்திருக்கிறது. கட்சிக்காக உழைத்த சீனியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இருக்க எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த பழனிவேல் தற்போது திடீரென தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி ஏற்றார்.
இவர் டி.ஆர்.பாலு ஆதரவாளர் என்பதால் இவருக்கு இந்த பதவி கிடைக்கப்பெற்றது சரி பதவி கிடைத்தவுடன் ஒரு மனிதன் அப்படியே மாறி விடுவதா அதற்கு முன்பு கட்சிக்காரர்களை பார்த்தால் குறைந்தபட்சம் வணக்கமாவது சொல்வார் இப்போது யாரையும் பாரத்தால் முகத்தை நேரே பார்ப்பது கூட கிடையாது. இவருடைய ஒரே ஒரு நோக்கம் எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட வேண்டும் இந்த வாய்ப்பை விட்டால் இனி நமக்கு வாய்ப்பு வராது என்பதை இவர் நன்கு தெரிந்து கொண்டார். அந்த வகையில் கல்லா கட்டுவது மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. தொகுதியில் நடக்கும் அரசு பணிகளுக்கு கமிஷன் வாங்குவதில் மும்மரம் காட்டுகிறார் இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து எனக்கு 18 பர்சன்டேஜ் கொடுத்து வட வேண்டும் அதற்குப் பிறகு பணியை துவங்குங்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது எனக்கு வர வேண்டிய கமிஷன் தொகையை கொடுத்துவிட்டு பணியை துவங்குங்கள் இல்லையென்றால் அப்படியே கிடக்கட்டும் என கறார் காட்டுகிறாராம் இதனால் ஒப்பந்தக்காரர்கள் மன உளைச்சலில் என்ன செய்வது என்று தெரியாமல் கதறுகிறார்களாம்.அதேபோல கட்சி பதவியை வைத்துக்கொண்டு தொழில் அதிபர்கள், வணிகர்கள், வியாபாரிகள், உள்ளிட்ட பலரிடமும் கட்சிக்காக செலவு செய்ய வேண்டி இருக்கிறது, எனக்கு இதை செய்து கொடுங்கள், அதை செய்து கொடுங்கள் எனவும் பணத்தை பிடுங்குகிறாராம் அவர்களும் வேறு வழியின்றி இவரை தட்டிக் கேட்க முடியாமல் கட்சித் தலைமை இவருக்கு பதவி கொடுத்துள்ளதால் வேறு வழியின்றி சங்கடத்தோடு பெரும் தொகைகளை கொடுத்து காலத்தை நகர்த்தி வருகின்றனர். இவருடைய அலுவலகத்திற்கு கட்சிக்காரர்கள் அதிகம் வருவதை விட காண்ட்ராக்டர்கள் தான் அதிகம் வருகிறார்களாம். இவரைப் பற்றி கட்சி தலைமையிடமும் முறையிட சிலர் தயாராகி வருவதாகவும் ஜாதி பார்த்து செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் கூடுதலாக இவர் மீது வலம் வருகிறது. இப்படியே சென்றால் வருகிற தேர்தலில் கட்சியினர் யாருமே இவருடன் இணைந்து பணியாற்ற மாட்டார்கள் உடனடியாக இவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கட்சியின் சீனியர்கள்

இது சம்பந்தமாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம் பட்டுக்கோட்டையை பொறுத்த வரை கட்சி எதற்கெடுத்தாலும் யாரை மாவட்ட செயலாளராக போட்டாலும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். மாவட்டச் செயலாளரால் அவரவரின் தேவைகளை யாரும் பூர்த்தி செய்ய முடியாது. மாவட்ட செயலாளர் பொறுத்த வரை நல்ல முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் இது கட்சி தலைமைக்கு தெரியும் இவர்களின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் எங்கள் மாவட்ட செயலாளர் பயப்பட மாட்டார் என்று முடித்துக் கொண்டனர்.

நெருப்பு இல்லாமல் புகையுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்..!
செய்தி – கார்த்திக்