அமைச்சர் ஐ பெரியசாமி இல்லத்தில் இன்று காலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையிலேயே அமைச்சர் ஐ பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஐ பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்கள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிக்கு வீட்டுமனை இடஒதுக்கீடு செய்ததாக ஐ பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதும், சமீபத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைகு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தற்போது இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறதா இல்லை வேறு ஏதேனும் காரணத்திற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்களா என்று தகவல் வெளியாகவில்லை. சோதனையின் போது
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமி இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக இன்று சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்:ரூபன்ராஜ்