இந்த வருடம் சேண்டா கோட்டையை சேர்ந்த கனிமொழி என்பவருடைய மொபைல் போன் அவருடைய வீட்டின் அருகில் காணாமல் போய்விட்டது. அந்த மொபைல் போனின் மதிப்பு சுமார் ஒன்பதாயிரம் இருக்கும். இதேபோன்று கடந்த வருடம் தளிக்கோட்டையைச் சேர்ந்த கபிலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சேண்டா கோட்டை அருகில் செல்லும் பொழுது அவருடைய விவோ ஒய் 58 மொபைல் போன் கீழே விழுந்து காணாமல் போய்விட்டது. இதன் மதிப்பு சுமார் 13,000. இவர்களுடைய காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மகாராஜா மற்றும் அங்கு பணிபுரியும் காவலர்கள் அந்த மொபைல் ஃபோன்களை உரியவர்களிடம்ஒப்படைத்தார்கள். இதனால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்க்கு பொதுமக்களால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
செய்தியாளர்
மு.க.சரவணன்.