இன்று காலை தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தை துவக்க துரை சந்திரசேகர் வருகிறார் என காலையில் செய்தி வெளியிட்டு இருந்தோம் அச்செய்தி பரபரப்பை உண்டாக்க திட்டமிட்டபடி காலை 11:30 மணியளவில் தஞ்சை மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் மாநகரச் செயலாளர் சண். ராமநாதன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் வந்தவுடன் செய்தி வெளியேறாமல் இருக்க அனைவரும் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் என்னை வரச் சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்களா என்று கேட்டவுடன் கொந்தளித்த மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் மேயர்.சண் ராமநாதனை கண்டபடி வசைப்பாடிவிட்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து உன்னால் முடிந்ததை நீ பார் என்னால் முடிந்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசிவிட்டு இடத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார். இச் சம்பவத்தால் கவுன்சிலர்களும், கட்சி பிரமுகர்களும் செய்வதறியாது திகைத்து கொண்டு வருத்தத்தில் கூட்டத்தை முடித்து விட்டு கிளம்பியுள்ளனர்.
இன்னும் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி – வெற்றி