புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது ஆறு மாத குழந்தை அனன்யாவை குழந்தையின் தாயார் வீட்டின் போர்டிகோவில் தொட்டியில் படுக்க வைத்து விட்டு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தை அனன் யாவை கடித்துள்ளது.

பின்னர் அப்பகுதியினர் சத்தம் போட்டதால் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்ற நிலையில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு தற்பொழுது சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வரக்கூடிய நிலையில் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.