கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற துயர சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எழுவப்பள்ளி கிராமத்தில் பள்ளியின் பின்புறம் உள்ள தண்ணீர் குட்டையில் தவறி விழுந்து 3ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு. சிறுவனை காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியரும் அதே தண்ணீர் குட்டையில் விழுந்து பலி

உணவு இடைவேளையில் பள்ளிக்கு பின் இருந்த தொட்டியில் விழுந்த மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற தலைமை ஆசிரியர் கவுரி சங்கர் ராஜா என இருவரும் ஒரே நேரத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்