தமிழ்நாடு ஆளுநர் ஆ. ன்.ரவி தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழ்நாட்டையும் அவமரியாதை செய்து வருவதை கண்டித்து
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாநகர செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு ஆளுநரை வெளியேறு என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் குணசேகரன், துணைவேந்தர் திவ்யா தனக்கோடி,பகுதி செயலாளர்கள் ராஜ் முகமது, மோகன், பாபு ஏ.எம்.ஜி விஜயகுமார் மணிவேல் கொட்டப்பட்டு இ.எம் தர்மராஜ் நீலமேகம் சிவக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக், வேங்கர் தனசேகரன்,
கலை இலக்கிய பகுதி பேரவை
மாநகர அமைப்பாளர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன், சுரேஷ், சங்கர், மற்றும்
கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.