Kகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் வசிக்கும் மலையாள மக்களின் முன்னெடுப்பில் 2,ஆம் ஆண்டாக மிக பிரம்மாண்டமாக நடைபெறும் சுவாமி ஐயப்பன் பூஜையும் மற்றும் திருவிளக்கு பூஜையும் பிரசித்தி பெற்ற ஓசூர் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 13 கல்நடும் விழா உடன் தொடங்கிய நிகழ்ச்சி டிசம்பர் 14 அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி டிசம்பர் 15 அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓசூர் சுவாமி ஐயப்பன் திருக்கோவிலின் கொடி கைரளி சமாஜம் தலைவர் G.மணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, கேரள மாநிலம் திருச்சூர் நகரில் இருந்து வந்த பல பிரபலமான ஆன்மீக குழுக்களின் சார்பாக பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, மலையாளி மக்களின் திருவிளக்கு பூஜை பேரணி வெகுவாக பொதுமக்களை ஈர்த்தது, ஓசூரில் வசிக்கும் கேரள மக்கள் தங்களின் பாரம்பரிய கலாச்சாரத்துடன் குடும்பமாக கலந்து கொண்டனர். ஜாதி, மதம், இனம் கடந்து பாகுபாடின்றி ஏராளமான ஓசூர் வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகளின் அருளாசியை பெற்றனர். இந்த ஆன்மீக நிகழ்ச்சியானது ஓசூர் பாரதிய ஹிந்து சேவா பரிவார் சார்பாக தலைவர் K.V. ராமகிருஷ்ணன், செயலாளர் K.Bசுரேந்திரன், பொருளாளர் G.உன்னி கிருஷ்ணன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் முகுந்தன், ராமச்சந்திரன், சதீஷ், கிருஷ்ணகுமார், பாலகிருஷ்ணன் மற்றும் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்களின் அயராத உழைப்பால் வெகு சிறப்பாக நடைபெற்றது. கேரள மக்களின் சார்பாக நடைபெற்ற ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகளின் பூஜையும் மற்றும் திருவிளக்கு பூஜையும் ஓசூர் மாநகரில் முக்கியத்துவம் பெற்றதை யாராலும் மறுக்க இயலாது.