திருச்சி திருவரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் ஸ்ரீநாத் ( வயது 41) எம்பிஏ படித்து வருகிறார். இன்னும் திருமணமாகாதவர்.இந்நிலையில் கடந்த 5ந்தேதி வாசுதேவன் சொந்த விஷயமாக ஹைதராபாத் சென்று விட்டு வீடு திரும்பினார்.அப்பொழுது வீட்டில் ஸ்ரீநாத் இல்லை.பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வாசுதேவன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைஸ்ரீநாத்தை தேடி வருகின்றனர்.