இந்திய அரசியலமைப்பு தினத்தை (Constitution day) முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு முகப்புரையை ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகம்மது குதுரத்துல்லா, (வளர்ச்சி) செல்வராஜ் உட்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.