சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட துட்டம்பட்டி கிராமத்தில் கடந்த 26-ம் தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு சரியான முறையில் தகவல் தெரிவிக்கவில்லை.. ஆண்டுக் கணக்கும் சரியாக சமர்க்கவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகார்மனு அளித்ததால் பெரும் பரபரப்பு…!
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துட்டம்பட்டி கிராமத்தில் நடந்து முடிந்த குடியரசு தினநாள் அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் என்று தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இளைஞர்கள் புகார்மனு அளிக்க வந்ததால் திடீரென்று பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது “கிராம சபையில் முந்தைய கிராம சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை,.மூன்று மாத செலவினங்கள் மட்டுமே கணக்கில் காண்பிக்கப்பட்டது.மூன்று ஆண்டு வரவு, செலவு கணக்குகளை காண்பிக்கவில்லை.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கணக்கு பதிவேடு பொதுமக்களால் கேட்டதை கொடுக்க மறுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து கிராம சபையில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஒப்புதலின்றி தலைவர் மற்றும் சில வார்டு உறுப்பினர்கள் மட்டுமே அந்த தீர்மான பதிவேட்டில் கையொப்பமிட்டு சென்றார்கள்.கிராமசபை கூட்டம் நடப்பது குறித்து முறையாக துண்டறிக்கை மற்றும் ஊர்தண்டல் மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை”என்றார்கள் ஆவேசமான குரலில்.

இந்த விவகாரம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியிடம் நாம் விளக்கம் கேட்டோம்.”துட்டம்பட்டியில் முறையாக கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்தால், அப்பகுதியில் மீண்டும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்படும்.அதில் பொதுமக்கள் கேட்கும் அணைத்து வரவு செலவுக் கணக்குகளும் காண்பிக்கப்படும்.”என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
துட்டம்பட்டி கிராம இளைஞர்கள் துடிப்பாக உள்ளார்கள்.இதில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அப்பகுதியில் வெடிப்பது நிச்சயம்…!

- சூர்யா