`7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் பிஇ கட்டணத்தை அரசே ஏற்கும்!’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

0

“7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணை வழங்கினார். அப்போது பேசி முதல்வர் ஸ்டாலின், அரசுப்பள்ளி மாணாக்கருக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு சுமார் 10,000 பேர் பயனடைவர். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் கூட நிச்சயமாக இந்த படிப்புக்கு வர முடியும். ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது. 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெறுவர். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here