திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருண் ஹோட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர். ராமசுப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

இந்த பொருட் காட்சியில் மிக பிரமாண்டமாய் தத்துவமாக வடிவமைக்கப்பட்டு அவதார் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் ஜெயின்ட்வீல், கொலம்பஸ், ரோபட்டிக் டாக், 3D ஷோ, பேய் வீடு, வாட்டர் பலூன், படகு சவாரி, பலூன் கேம்ஸ், ஹெலிகாப்டர்,ரோலர் கோஸ்டர்,மினி கார், மினி பைக்,பனி உலகம், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாடி மகிழ ரிமோட் கார் ஹெலிகாப்டர் ஏரோபிளேன் ட்ரோன் மற்றும் எண்ணற்ற விளையாட்டு சாதனங்கள், ரியல் எஸ்டேட், கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு அரங்குகள் மற்றும் பல மெய்சிலிர்க்க வைக்கும் அரங்குகள் நிறைந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து பொருட்காட்சி நல சங்க தலைவர் அன்வர்ராஜா,

மாநில செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் சலீம், பெரம்பலூர் நளபாகம் குழுமத் தலைவர் முத்துவீரன், காசி விஸ்வநாதன், ஆசிரியர் பாபு, அய்யர் மாமா,கார்த்தி,முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை SSS என்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் சுதாகரன் மற்றும் எஸ் டிவி பாலு செய்திருந்தார்.

