ஓசூர் 17 வது வார்டு பகுதி மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான ராஜ வாய்க்கால் சீரமைப்பு பணிகளை 17வது திமுக மாமன்ற உறுப்பினர் நாகராஜன் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக இராஜா வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.

மேலும் தேசிங்கு நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் விளங்கும் குளத்தை சுத்தப்படுத்தி தருமாறு தேசிங்கு நகர் பகுதி முக்கியஸ்தர்கள் சந்திரப்பா,ஊர்கவுண்டர் சண்முகம்,இளைஞரணி முருகேஷ்,இராமச்சந்திரன் மற்றும் பலர் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். மேல் நடவடிக்கை எடுப்பதாக கவுன்சிலர் அவர்கள் உறுதி அளித்தார்.
செய்தியாளர் : மார்க்ஸ் ஓசூர்