3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மம்தா!- மோடி வாழ்த்து

0

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மம்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் மம்தா பானர்ஜி. மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவியேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்றார்.

முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here