திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை மணலோடை பகுதியில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எடை மேடையை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்
அருண் நேரு துவங்கி வைத்தார்.
2.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக செம்மொழிச்சாம்பட்டி பகுதியில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அரசு அதிகாரிகள், மாவட்டச் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்