நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா!

0

இயக்குநர் கே.பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நேற்று நடிகர் பாண்டு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக், மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், முன்னணி இயக்குநரான கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகன் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், “என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

சாந்தனுவின் டுவீட்டைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் விரைவில் பூரண நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here