Wednesday, October 29, 2025
No menu items!
Google search engine
HomeUncategorized16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி.திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி.திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் அதன்படி திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர்கள் அழகுமலை (திருச்சி தெற்கு), ஜெயராஜ் (திருச்சி வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் தனபால் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னதாக தெற்கு மாவட்ட பொருளாளர் தங்கவேல் வரவேற்றார்.


ஆர்ப்பாட்டத்தில்தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். 01.6.2009முதல் அரசாணை 234 ன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ 15 ஆயிரம் வழங்க வேண்டும்.கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் இருபதாயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்றுபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
முடிவில் வடக்கு மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற நவம்பர் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து ள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments