15வது ஐபிஎல் போட்டியில் கோடிக்கு ஏலம் போன வீரர்கள்!- திகைக்க வைத்த இங்கிலாந்து வீரர்

0

15ஐபிஎல் போட்டியில் 2வது நாளாக இன்றும் தொடங்கியுள்ளது. இதில், இந்திய, இங்கிலாந்து வீரர்கள் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

2வது நாள் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் என 2 அணிகள் இணைந்துள்ள நிலையில், மொத்தம் 10 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக மெகா ஏலம் நடத்தப்படுகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில், 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்களில் இருந்து தங்கள் அணிக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்து ஏலத்தில் எடுக்க, அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நட்சத்திர வீரர்கள் அஷ்வின், போல்ட், வார்னர் உள்பட 48 பேருக்கு அடிப்படைவிலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ.1.5 கோடி பட்டியலில் வாஷிங்டன் சுந்தர், ஹெட்மயர் உள்பட 20 வீரர்களும், ரூ.1 கோடி பிரிவில் 34 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.20 லட்சமாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப் பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள் என தனித்திறனுக்கு ஏற்ப வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். விக்கெட் கீப்பரும், இடது கை பேட்ஸ்மேனுமான இஷான் கிஷனை வாங்க மும்பை, ஐதராபாத், குஜராத், பஞ்சாப் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.

ஏற்கனவே தங்கள் அணிக்காக விளையாடி, மெகா ஏலத்துக்கு முன்பாக விடுவிக்கப்பட்டிருந்த இஷான் கிஷனை மீண்டும் வாங்க உறுதியுடன் இருந்த மும்பை அணி கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் ரூ.15.25 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட 2வது இந்திய வீரர் என்ற பெருமை கிஷனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 2015 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டதே அதிகபட்சமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வீரரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்குவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2011 சீசனில் ரோகித் ஷர்மாவை அந்த அணி ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது.

2018ல் ரூ.6.4 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்ட இஷான், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2020 ஐபிஎல் சீசனில் அவர் அதிகபட்சமாக 30 சிக்சர்களை விளாசி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மெகா ஏலம் 2வது நாளாக இன்றும் தொடங்கியது.

 • தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை ரூ.2.60 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
 • அஜிங்கியா ரஹானேவை ரூ.1 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி
 • மந்தீப் சிங்கை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி
 • இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி
 • மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்
 • இந்திய வீரர் ஜெயந்த் யாதவை ரூ.1.70 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்
 • இந்திய வீரர் விஜய் சங்கரை ரூ.1.40 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்
 • மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி
 • தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை ரூ.4.20 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி
 • இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
 • இந்திய வீரர் கெளதமை ரூ.90 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி
 • இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை ரூ.5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது
 • இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை ரூ.2 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
 • இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவை 70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி
 • இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை ரூ.4.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது
 • இந்திய வீரர் சந்தீப் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது
 • டேவிட் மாலனை யாரும் ஏலம் எடுக்கவில்லை
 • ஆஸி வீரர் ஆரோன் பிஞ்ச் – எந்த அணியும் வாங்கவில்லை
 • இந்திய வீரர் புஜாரா – எந்த அணியும் வாங்கவில்லை
 • இந்திய வீரர் சவுரப் திவாரியை எந்த அணியும் வாங்கவில்லை
 • இயோன் மோர்கனை எந்த அணியும் வாங்கவில்லை

*ஆஸி வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே -எந்த அணியும் வாங்கவில்லை

 • நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீசமை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை
 • இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டானை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
 • இந்திய வீரர் இஷாந்த் சர்மாவை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை
 • தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசைனி நிகிடியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here