போலிப் பொறியாளரா மேகன்..? போலிகளை ஓழிக்க அதிரடி வழிகாட்டும் CAT….

0

எல்லா தரமான பொருட்களுக்குமே அதன் முதல் எதிரி அதே பெயரில் வெளியாகும் போலி தயாரிப்புகள்தான். எலெக்ட்ரானிக் சாதனங்கள், மின்னணு கருவிகள், உதிரிப் பாகங்கள், மருந்து மாத்திரைகள் தொடங்கி தண்ணீர் பாக்கெட் வரை நம் நாட்டில் போலிகளின் ராஜ்ஜியமே மேலோங்கி நிற்கிறது. போலி மருத்துவர்கள், போலி வக்கீல்கள், இவர்களுக்கும் இங்குப் பஞ்சமில்லை.

அதே போன்று, போலி சிவில் இன்ஜினியர்களும் உருவாகத் துவங்கி தற்போது நமது கட்டுமானத்துறையில் ஏறத்தாழ 50 சதவிகிதம் போலி இன்ஜினியர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பது தற்போது வெளி வராத செய்தி.

கவுன்சில்

தரமற்ற கட்டுமானங்களை உருவாக்கி, சிவில் பொறியியலுக்குக் களங்கத்தைக் கற்பிக்கும் இந்த போலி பொறியாளர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்? எப்படி கட்டுமானத்துறையில் ஊடுருவுகிறார்கள் என விளக்கத்தை அளித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளித்து இருக்கிறார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் பொறி. பெரு.கணபதியிடம் கேட்டோம்

.
பொறியியல் கல்வி படித்திராதவர்கள், அக்கல்வியை இடைநிறுத்தம் செய்தவர்கள், வேறு துறை படித்தவர்கள், கைவசம் கொஞ்சம் பணத்தை வைத்திருப்பவர்கள், குறுகிய காலத்தில் கட்டுமானத்துறையில் பன்மடங்கு லாபம் பெற்று விடலாம் என்கிற எண்ணத்தில் இத்துறையில் நுழைகிறார்கள். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு,

தான் ஒரு கட்டுமான புராஜெக்டை மட்டும் கட்டிவிட்டு, பல கட்டுமான புராஜெக்டுகளை முடித்திருக்கிறேன் என்று பொய்யான தகவல்களைக் கூறி கட்டுமானப் பணிகளைப் புதிதாகப் பெற்றுவிடுகிறார்கள். அதற்குச் சிறந்த போலி சிவில் இன்ஜினியருக்கு எடுத்துக்காட்டாக. பலரும் உள்ளனர் தஞ்சை மாவட்ட கண்ணகி தெரு முத்தமிழ் நகர் மெடிக்கல் காலேஜ் சாலையில் வசிக்கும் மேகன் ஆவார்.

சாதாரணமாக இருந்த இந்த மேகன் பண ஆசை உச்சந்தலைக்கு ஏரி தானொரு கட்டிடப் பொறியாளர் என்று வாடிக்கையாளர்களிடம் கூறி கட்டிட வேலையை எடுத்து வேலைசெய்தார். அதிலும் பல சிக்கல்கள் பிரச்சினைகள் வந்தன சில கட்டிட பொறியாளர்களை கொண்டு சரி செய்தார். அவர் கட்டும் அனைத்து வீடுகளும் அரைகுறையாக அக்கப்போராகா பிரச்சினைக்கு உரிய நபராக மாறியதால் பல உண்மையான கட்டிடப் பொறியாளருக்குக் கெட்ட பெயர் வந்தது தான் மிச்சம். தற்போது கூட நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள நாடார் காலனியில் அவர் கட்டிய கட்டிடம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான போலி கட்டிடப் பொறியாளர்கள் செய்த தவறுகள் மூலம் கட்டிடப் பொறியாளர்களின் மீது நம்பிக்கை சீர்குலையச் செய்கிறது.

இந்த மாதிரியான போலி பொறியாளர்களை இனம்கண்டு மக்கள் மத்தியில் அவர்களின் முகத்திரையைக் கிழித்து பொது மக்கள் கவனத்திற்கு எங்கள் சங்கம் எடுத்துச் செல்ல இருக்கிறது. இருந்தாலும் பொது மக்கள் அனைவரும் யார் உண்மையான கட்டிடப் பொறியாளர் என்ற அறிய எங்கள் சங்கத்தை (CAT)அணுகலாம் அவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்க எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்பதை இச்செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
முகநூலில் அவரைப்பற்றிய தெரிவித்த விவரம்

மேகன் விபரம்

மேலும் இது போன்ற போலி பொறியாளர்களிடமோ, மேஸ்திரியிடமோ கட்டுமானப்பணிகளை ஒப்படைத்தால், அவர்களால் கட்டப்படும் கட்டுமானங்கள் குறுகிய காலத்தில் சிதிலமடைந்து பாழாகிவிடும். நீண்ட ஆயுள் கொண்டு நிலைபெற்ற கட்டிடங்களாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஏனெனில், மண் பரிசோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை, அஸ்திவாரப் பணிகளில் கலவை முறைகள், அதற்குண்டான சரியான விகிதங்கள், எந்த வகையான மண்ணுக்கு எந்த வகையான அடித்தளம் அமைப்பது போன்ற முதற்கட்டப் பணிகளை முறைப்படி செய்யமாட்டார்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே முறையையே எல்லா கட்டுமானங்களிலும் பயன்படுத்து வார்கள். அடுத்தகட்ட பணிகளான காலம், பில்லர், கான்கிரீட் தளம், சென்ட்ரிங் ஒர்க் போன்ற பணிகளுக்கு எந்த அளவில் கம்பிகளை வாங்க வேண்டும்?

பொறி.கணபதி

எப்படிப் பொருத்த வேண்டும்? ஒவ்வொரு ஜங்ஷனிலும் எந்த அளவுள்ள கம்பிகளை இணைக்க வேண்டும்? எந்த வகையான ஸ்டான்டர்ட் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும்? போன்ற விவரங்களை ஒரு பொறியியல் படித்த, அனுபவம் மிக்க இன்ஜினியரால் மட்டுமே செயல்படுத்த முடியும். அவ்வாறில்லாமல்,

போலி பொறியாளரைக் கொண்டு அப்பணிகளை முடித்தால் இழப்பு பொதுமக்களாகிய நம் அனைவருக்கும்தான். கடைசிக்கட்ட பணிகளான எலெக்ட்ரிகல், பிளம்பிங், மரவேலைகள், பூச்சுவேலைகள், தரைகள் அமைத்தல், பெயிண்டிங் போன்றவற்றை ஒரு பொறியாளரின் மேற்பார்வையில்தான் செய்ய வேண்டும்.
அவ்வாறில்லாமல் போலி பொறியாளர்களின் மேற்பார்வையில் இப்பணிகளைச் செய்து முடித்தால் அக்கட்டிடம் முழுமை பெறாத கட்டிடமாகத்தான் இருக்கும். அகில இந்திய அளவில்

மருத்துவ கவுன்சில் உள்ளது போலப் பொறியாளர் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்திவிட்டால், இத்துறையில் போலி பொறியாளர்கள் நுழைய முடியாது.

எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையும்போதே அவர்களின் கல்விச் சான்றிதழ்களைச் சரி பார்த்து போலி பொறியாளர்களைப் புறக்கணித்து விடுவோம். அது மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் முழுமையாகப் போலி பொறியாளர்களை இனம் கண்டு விரட்ட முடியும். ஆகவே, மாணவர்கள் அதிக அளவில் கட்டுமானத்துறையைத் தேர்ந்தெடுப்பதோடு, பொதுமக்களும் தரமான, உண்மையான பொறியாளரிடம் தனது கனவு இல்லத்தை ஒப்படைப்பது மூலம் போலி பொறியாளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here