திருச்சிராப்பள்ளி மாவட்டம் வேளான்மைத்துறை உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பு இயக்கம்–சத்து மிகு தானியங்களைப் பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்மொழி உரையாற்றுகையில் சிறுதானிய உணவு வகைகளின் பயன் பாட்டையும், மனித குலத்திற்கு எவ்வளவு சத்தான உணவு என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். சிறுதானியங்களை உணவாக எடுத்து கொள்ளும் போது பயன் பாடு அதிகரிப்பால் தமிழக விவசாயி களுக்கு ஊக்க மளிக்கும் வகையில் இருக்கும் என்பதையும், மேலும் விவசாய பெருங் குடியினருக்கு விருதுகளையும் வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர்தனது உரையில் சிறுதானிய உணவு வகைகள் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் விவசாய தொழில் செய்பவறுக்கு என்ன நன்மைகள் பயக்கும் என்பதை கூறினார் .