10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

0

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here