திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் கூறியிருப்பதாவது :-
புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் பென்ஜ் அண்ட் பார் மீட்டிங் ( நீதிபதிகள், வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி ) நாளை ( 25ந்தேதி திங்கட்கிழமை) மதியம் 1 மணி அளவில் புதிய கட்டிடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம் அல்லது தலைவரிடம் கூறினால் அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார்.
கட்டாயம் வழக்கறிஞர்கள் தாங்கள் சீருடையில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பார் கவுன்சில் அடையாள அட்டை கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ் செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்,