`10 சதவிகிதம் அல்ல 73 சதவிகிதம் சொத்துக் குவித்துள்ளார்!’- லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ராஜேந்திர பாலாஜி

0

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வருமானத்தை விட 73% அதிக சொத்துகள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 7 கோடிக்கும் அதிகமான சொத்துகள் சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த அமர்வில் இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு முகாந்திரம் உள்ளது.

ஆரம்ப விசாரணையில் 10%க்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து, 73%க்கு மேல் சொத்து சேர்த்தது தெரிய வந்ததால் மேல் ராஜேந்திர பாலாஜி மீது மேல் விசாரணை நடக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிய கோரும் மதுரை மகேந்திரன் மனு செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here