ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக புகையிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டு புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ….ரியல் ஹீரோ ஆகுங்க என்ற புகையிலை
உபயோகிப்பதால் ஏற்படும்
ஆபத்துக்கள் மற்றும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து அனுப்பும் போட்டியை நடத்தியது இதில் பொதுமக்கள் ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த 130 ரீல்களில்
50 ரீல்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில்
விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தை இயக்கிய திரைப்பட
இயக்குனர் சீனு ராமசாமி, குறும்படங்கள் அனுப்பிய படைப்பாளிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் மேலும் முதல் பரிசை வென்ற வெற்றியாளருக்கு ரூ. 10,000 பரிசு தொகை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

என்னுடைய திரைப்படங்களில் கதாநாயகர்கள் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றதில்லை.
இனிமேலும் இருக்காது.
வரும் நாட்களில் புகையிலை விழிப்புணர்வு குறித்த
திரைப்படம் இயக்குவேன்.
வாழ்க்கையில் தோல்வியே சிறந்த ஆசான். நான் வெற்றியை விட தோல்வியின் போது கற்றுக் கொண்ட விஷயங்கள் அதிகம். ஆகவே தோல்வியை இயல்பாக எடுத்துக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்றார்.
விழாவில் கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் அர்ஷியா பேகம் , மதர் தெரசா கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆர் சி உதயகுமார்,பெரியார் மருத்தியல் கல்லூரி செந்தாமரை,மாரியம்மன் செவிலியர் கல்லூரி முதல்வர் ரூபா,
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் செயலாளர் ஜி ராஜசேகரன்ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜி.கோவிந்தராஜ்
வரவேற்றார். புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணரும் செயல் இயக்குநருமான டாக்டர் பி சசி பிரியா நன்றி கூறினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி உடன் கலந்துரையாடினர்.