Friday, March 14, 2025
No menu items!
HomeUncategorizedஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்...

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் & மேலூர் பகுதிகளில் ஒவ்வொரு கட்டிடங்கள் முன்பும் குவியல் குவியலாக ஈரம் சொட்ட சொட்ட டிப்பர் லாரிகள், பிக்கப் வாகனங்களில் மூலம் மணல் வினியோகம் தாராளமாக நடந்து வருகிறது. இச்செய்தி எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தபோது என்பது தெரியவில்லை ஒருவேளை தாக்கத்தை ஏற்படுத்தினால் ஒவ்வொரு கட்டித்திற்கு முன்பு கொட்டப்படும் மணலை வெளியில் தெரியாமல் மறைக்க தற்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் திருட்டு மணலுக்கு குளிரும் என்பதால் வெளிவுலகத்திற்கு தெரியாமல் இருக்க முழுவதையும் தார்ப்பாய் போட்டு மூடப்படும் பணியும் அல்லது சாக்கு முட்டையில் நிரப்பி வைப்பதையும் காணமுடியும். மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் பாதுகாப்பதில், இதில் கட்சி பேதம் இன்றியும், எந்த இடத்தில் மணல் கொட்டப்படும் கட்டிடங்கள் வரை மணல் வாகனம் பாதுகாப்பாக செல்கிறதா என்பதை உறுதிபடுத்த ஒவ்வொரு முச்சந்தியிலும் ஆட்களின் நியமித்து யார் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் போனில் கான்பிரன்ஸ் காலில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணல் திருட்டை தடுக்க ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் வேண்டுகோள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version