அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள வெள்ளாற்று பாலம் அரியலூர் , கடலூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழிதடங்களில் ஒன்று.இதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம்
அக் 25 ந்தேதி வெள்ளாற்று மேம்பாலத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர்மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
வெள்ளாற்று மேம்பால பணிகளை பார்வையிட்டதில் இதில் இணைப்பு சாலையின் இருபுறமும் சிறுமழைக்கே
அரிப்பு ஏற்பட்டு வாரிபோல காணப்படுவதை சரி செய்யும் பொருட்டு ,

இணைப்பு சாலையின் இரு புறமும்
கால்வாய் அமைத்து அந்த கால்வாயினுடைய தொடர்ச்சி சுமார் 20 மீட்டர் கிழக்கு புறம் நீட்டிக்கப்பட்டு கோட்டைக்காடு செல்லும் சாலையோடு இணைந்து மழை நீர் வழிந்து ஓடும் விதமாக அமைக்கப்பட வேண்டும் என்றும் இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவர்கள் என போராட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. மேலும் வெள்ளாற்று பாலத்தை பாதுகாக்கும் விதமாக இணைப்பு சாலையின் இருபுறமும் பனை விதைகள் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் கு.முடிமன்னன் , மண்டல துணைச் செயலாளர்
ஏ கே ராஜேந்திரன்,பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் ஆடியபாதம்,, அஇஅதிமுக ஓபிஎஸ் அணிஒன்றிய செயலாளர் எழிலரசன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு தலைவர் பாலசிங்கம் மற்றும்கோட்டைக்காடு முள்ளுக்குறிச்சி சேர்ந்த கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.

