தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று 6/5/2024 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒன்பது முப்பது மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மொத்தமாக 7.60 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 2023 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 2024 94.56 சதவீதமாக அது உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி அளித்துள்ளனர்.
100க்கு 100 எடுத்தவர்கள் :
தமிழ் பாடத்தில் 35 பேர்
ஆங்கிலத்தில் 7 பேர்
கணிதத்தில் 2587
கணினி அறிவியலில் 6996
வேதியலில் 471
இயற்பியலில் 633
உயிரியல் பாடத்தில் 652 பேர்
தாவரவியல் 90 பேர்
வணிகவியல் 6142
பொருளியல் பாடத்தில் 3299.
தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாவட்டம் :
மேலும் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.45% மாணவர்கள் தேர்ச்சியோடு முதலிடம் பிடித்தது.
இரண்டாவதாக ஈரோடு மாவட்டம் 97.42 சதவீதத்துடனும், சிவகங்கை 97.42 சதவீதம், அரியலூர் 97.25%, கோயம்புத்தூர் 96.97%, விருதுநகர் 96.64 சதவீதம் என வரிசை படுத்தப்பட்டுள்ளது.
அ.காவியன்
செய்தியாளர்