அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில்
1.1.26 புதன்கிழமை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒன்றிய செயலாளர்கள் க.வீரவளவன் , தலித்.வெற்றி ஆகியோர்கள் ஒருங்கிணைப்பில் புதிதாக பொறுபேற்றுள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி மாவட்ட
செயலாளர் பெ.அன்பானந்தம்,
அரியலூர் குன்னம் மண்டல துணை செயலாளர் ம.கருப்புசாமி,
பெரம்பலுர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் புதிய பொறுப்பாளர்கள் செந்துறை கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று
நகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் ,
தந்தை பெரியார். மற்றும் கருணை வீர்ர் காமராஜர் ஆகியோரின் திருஉருவ
சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்
மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், முன்னாள் மண்டலத் துணைச் செயலாளர் செ.வே மாறன் , வெ. கடம்பன் மாவட்ட பொறுப்பாளர் வாசி .ஜெய குமார் பாலசிங்கம் தொல்.பாரி மாவட்ட து.அமைப்பாளர் சி. அருள் ஜோதி, சிறுகளத்தூர் கந்தன் மணிமொழியன், எல்ஐசி முருகேசன் , தீரன் பிரபாகரன் சண்முகம் மதியழகன் வீரமணி முருகேசன் செல்வம் நகரம் பாலு
கோ.சி குபேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.

