கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் சார்பாக ஆண்டு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக போட்டிகள், கண்காட்சிகள், கல்வெட்டு பயிற்சி நடத்தப்படுகின்றது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழரும் தொழில்நுட்பமும் என்னும் பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்டைய தொழில் நுட்பங்களை மாணாக்கர்கள் அறிந்து கொள்ள பாடதிட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ள அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக அரும்பொருட்கள் மற்றும் பாதுகாத்தல் பயிற்சி நடத்தப்பட்டது இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி KET பாலிடெக்னிக் கலூரியில் முதலாமாண்டு பயிலும் 60 மாணவ மாணவிகள் பங்கேற்றனர் மாணவர்களுக்கு அருங்காட்சியக அரும்பொருட்களான சங்க கால செங்கல், கட்டுமாணங்கள், சிற்பங்கள், நினைவுக் கல் மற்றும் அதன் வகைகள், சிற்பங்கள், பீரங்கி, போர் கருவிகள், தேர் சிற்பங்கள், தமிழக நாணயங்கள், உலோக திருமேனிகள் போன்றவற்றின் தொன்மை உருவாக்கிய விதம் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அரும்பொருட்களை வேதியல் முறைப்படி பாதுகாத்தல் தொடர்பான பயிற்சியினை மாணாக்கர்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவகுமார் வழங்கினார்.
நிகழ்வு தமிழ் ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கல்லூரி ஆசிரியர்கள் சினிவாசன், மாது, கணேசன், கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் பங்கேற்றார்கள், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் மேற்கொண்டார்கள்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி