தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவோணம் ஊராட்சி ஒன்றியம் வடக்கிக்கொட்டை, வெட்டுவாகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையில் தண்ணீர் வடியாமல் இருந்ததை சரி செய்து கொடுக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூறிய போது தகாத வார்த்தையில் பேசிய சாமிநாதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தொடர்ந்து தலித் சமூகத்தை இழிவாக பேசி வருவதையும், திருவோணம் ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கூறியும், மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருவோணம் காவாலிப்பட்டி ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றிய மக்களின் 100 நாள் அட்டையை பறிமுதல் செய்து ஒருமையில் பேசி பணித்தள பொறுப்பாளர் பணிநீக்கம் செய்துள்ளதை கண்டித்தும், திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்தகவல் அறிந்த திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் இன்ஸ்பெக்டர் முத்து, திருவோணம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வாட்டாத்திகோட்டை சப் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமூக பேச்சை வார்த்தை பிறகு கலைந்து சென்றனர்..

