Thursday, October 9, 2025
No menu items!
HomeUncategorizedயார் எழுதிக் கொடுத்தாலும் உண்மை தன்மை அறிந்து பேச த.வெ.க தலைவர் விஜய்க்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர்...

யார் எழுதிக் கொடுத்தாலும் உண்மை தன்மை அறிந்து பேச த.வெ.க தலைவர் விஜய்க்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுரை..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே ரூ.24 கோடி மதிப்பில் மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணியை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று ( 26.09.25) துவங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது :

விவாசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கோரிக்கை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர், இந்த தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 24 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிலே கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டது. அதற்கான அரசாணை 11.04.2025 அன்று வெளியிடப்பட்டது. அதை அடிக்கோலிட்டுப் பணியைத் துவக்குகின்ற நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்றிருக்கிறது.

பச்சைமலையிலே உற்பத்தியாகி பெரம்பலூர் மாவட்டம் வழியே இங்கு வருகின்றபோது, காட்டாறுகளும் சேர்ந்து மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்ற தண்ணீரைத் தேக்குவதன் மூலம் இந்தச் சுற்றுவட்டத்தில் இருக்கின்ற 400 ஏக்கர் நிலப்பரப்பு நீர் வசதியை, பாசனத்திற்காகப் பெறுகின்ற வாய்ப்பும், 69 கிணறுகளுடைய நீர்மட்டம் உயரந்து, ஒரு கிமீ சுற்றளவிற்கு நீர்மட்டம் உயர்ந்து இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவர். என்பதோடு

சமீபத்தில் ஒருவர் “இந்தத் திட்டம் நிறைவேற்ற அரசு முன்வரவில்லை” என்று குற்றம் சாட்டி பேசினார். அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கின்றபோது அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன. அந்தத் திட்டத்தின் கோரிக்கையேற்று முதலமைச்சர் அறிவித்த பிறகு அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் பின்னர் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு
அந்தத் துறை மூலமாக டெண்டர் கோரப்படும். டெண்டரில் யார் ? குறைவான தொகையில் விண்ணப்பித்தவர்களை ஒப்பந்தப் புள்ளிக்கு அழைத்து, அவர்களிடத்திலே ஒப்பந்தம் கொடுத்து அந்தப் பணி துவக்கப்படும். இது ஒரு அரசின் நடைமுறை.

நடைமுறை தெரியாமல் அரசின் பணி எதுவும் தெரியாமல், வாய்க்கு வந்த போக்கிலே ஏதோ? குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்ன குற்றத்திற்கு இன்றைக்கு இந்த அடிக்கோல் விழா ஒரு விடையளிக்கின்ற நிகழ்வாக இருக்கிறது. இதற்குப் பிறகாவது பேசுகின்ற செய்தியினுடைய உண்மைத்தன்மையை, யார்? எழுதிக் கொடுத்தாலும், அதை வள்ளுவர் சொன்னது போல அதனுடைய உண்மைத்தன்மையை அறிந்து பேச வேண்டும் என்று இந்த நேரத்தில் பேசுபவர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் என்றவர் மேலும்

வெல்லம் வியாபாரம் செய்பவர்கள் கூட மரியாதையாக எல்லாரிடத்திலும் பேசித்தான், வியாபாரம் செய்வார்கள். ஆனால், இவர் அதைக் கூடச் செய்யாமல் வந்திருப்பார் என்பதுதான் தெரிகிறது. யாரையும் மதிக்கின்ற போக்கு இல்லாமல், மிகத் துச்சமாக ஒருமையில் பேசுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நாம் பார்த்திராத மிகத் தாழ்வான நிலையாகும். அந்த நிலைக்கு வந்திருக்கின்ற எடப்பாடியை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். கடந்த 13-ஆம் தேதி அரியலூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

எம்..எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version