திருச்சி உக்கடை அரியமங்கலம் தெற்கு பகுதில் உள்ள ரஹ்மத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் வருடம் வருடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக,அப்பகுதி மக்களுக்கு. கந்தூரி, உணவு வழங்கப்படுவது வழக்கம்,
அந்த வகையில் 14. ஆம் ஆண்டை முன்னிட்டு உலக அமைதிக்காவும், நோய், நொடியற்ற வாழ்க்கை வாழ்வதற்க்காவும், மத நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்கவும், ஜாதி, மதம், இனம், மொழி. வேறுபாடுகள், இருந்தாலும், நாம் அனைவரும், இறைவன் ஒருவனுக்கு பயந்து அன்போடும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் குர்ஆன் ஷரீப் ஓதி பிரத்தனை செய்து உணவுகள் வழங்கும் விழா ரஹமத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்த கொண்டு, உணவு வழங்கி தொடங்கி வைத்தார்,
இதனை தொடர்ந்து மத பாகு பாடுயின்றி சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, உணவு வழங்கப்பட்டு
இதில் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமுக ஆர்வாலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்