24.9.25 அன்று தாமரங்கோடையைச் சேர்ந்த மனோகரன் அவருடைய செல்போனை தொலைத்து விட்டார். மற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா 8.11.25 அன்று பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினத்திற்கு பேருந்தில் வரும் பொழுது அவருடைய மொபைல் போனை தொலைத்து விட்டார். இவருடைய மொபைல் போனும் தலா பத்தாயிரம் இருக்கும். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆய்வாளர் முருகேசன் அவர்களின் ஆணைப்படி சிறப்பாக செயல்பட்டு மொபைல் போன்களை கண்டுபிடித்து இருவரிடமும் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவலர் பிலால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

