மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 24வது மாநில மாநாடு விழுப்புரம் ஜனவரி 3 4 5 தேதிகளில் சிறப்புடன் நடைபெற்றது பேரணி பொதுக்கூட்டம் பிரதிநிதிகள் வாதம் தோழமைக் கட்சிகளின் வாழ்த்துரை ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றது.
மாநாட்டின் இறுதியாக பிரதிநிதிகளின் அமோக ஆதரவுடன் முன்னாள் இந்திய மாணவர் சங்க தலைவரும் விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய துணை அமைப்புகளில் திறம்பட செயல்பட்ட தோழர் பி சண்முகம் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது 15 பேர் கொண்ட மாநில செயற்குழுவிற்கு U.வாசுகி, P.சண்முகம், N.குணசேகரன், K.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், S.வெங்கடேசன் MP K.பாலபாரதி, G.சுகுமாரன், K.சாமுவேல் ராஜ், S.கண்ணன், N.பாண்டி, D.ரவீந்திரன், S.முத்து கண்ணன், K.அர்ஜுனன், K.சுவாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இந்த மாநில மாநாட்டில் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ கன்வீனர் தோழர்.பிரகாஷ்காரத், பொலிட் பீரோ உறுப்பினர்கள் தோழர் பிருந்தாகாரத், தோழர்.எம்ஏ பேபி, சிபிஐ மாநில செயலாளர் தோழர் முத்தரசன், பி.சம்பத், G.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.