செப்டம்பர் 13 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தோழர்.சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி ஊர்வலம்
நடைபெற்றது. இரங்கல் ஊர்வலத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஓசூர் ரயில்வே பாலம் அருகில் துவங்கிய ஊர்வலம் தேன்கனிகோட்டை ரோடு வழியாக காந்தி சிலை, MG ரோடு, தாலுக்கா ஆபீஸ் ரோடு வழியாக அண்ணா சிலை அடைந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது . சிபிஐஎம் மாநகரச் செயலாளர் சி.பி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜா ரெட்டி, CPI சார்பாக தோழர் மாதைய்யன், தி.க.சார்பாக தோழர் வனவேந்தன், எழுத்தாளர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், CITU மாவட்ட செயலாளர் தோழர் ஸ்ரீதர், மற்றும் தோழர் SR ஜெயராமன்,
ஆகியோர் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றினர். நிகழ்வில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளீதரன், மனித நேய மக்கள் கட்சி தோழர்கள், கட்சியின் மாவட்ட செயற்குழு தோழர்கள் சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு தோழர் D.நாராயண மூர்த்தி, உள்ளிட்ட மாநகரக்குழு, கிளைச் செயலாளர்கள், வெகுஜன அரங்க தோழர்கள், ஆதரவாளர்கள், திரளாக பங்கேற்றனர். இறுதியில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.