பிரபல மணல் தாதா புதுக்கோட்டை எஸ். ராமச்சந்திரன் காலம் முடிந்துவிட்டது இனி நான் தான் மணலுக்கு ராஜா என்ற மார்த்தட்டிய மயிலாடுதுறை ராஜப்பா தஞ்சை மாவட்டத்தில் கால் வைக்க முடியாமல் தவிப்பது ஏன் .? தொழிலை தொடங்க முடியாமல் மௌனமாக இருப்பது ஏன்.? என்ற கேள்விகள் மணல் பிரமுகர்கள் வட்டாரத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது. தஞ்சையில் மட்டும் கிராவல் தொழிலை நடத்த முடியாமல் தடுப்பது யார்.? பின்னணியில் யார் யார் உள்ளனர் என்ன நடக்கிறது தஞ்சையில் என சில மணல் மாஃபியாக்களிடம் பேசினோம்.
மணலில் கொடிகட்டி பறந்த கறம்பக்குடி கரிகாலன், புதுக்கோட்டை எஸ் .ஆர், திண்டுக்கல் ரத்தினம், உள்ளிட்டோர் மணலின் படு பாதாளம் வரை பாய்ந்து பணத்தை பார்த்து சம்பாதித்து ஓய்ந்து விட்டனர். தற்போது மீண்டும் மணலைபற்றி ஆய்வுக்கு வந்திருக்கிறார் மயிலாடுதுறையைச் சார்ந்த ராஜப்பா என்கிறவர். இவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே குவாரிப்பணியை எடுப்பதற்கு கிச்சன் கேபினட் மற்றும் மருமகன் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கு முன்னேற்படாக முதன் முதலில் கிராவல் மற்றும் சவுடு
மண் எடுப்பதற்கு அவருக்கு அனுமதி அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் மணல் ராஜப்பா மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கிராவல் தொழிலை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை மேல் இடத்திற்கும் சக அதிகாரிகளுக்கும் பிரித்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கிராவல் மண்ணின் முக்கியமான பகுதியான தஞ்சை பகுதியை இன்னும் அவரால் நெருங்க முடியவில்லை அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் எங்களுக்கே தெரியவில்லை அதிகாரிகள் ஒத்துழைக்க தயாராக இருந்தாலும் மேலிடத்திலிருந்து எந்த சிக்னலும் வர மறுக்கிறது என்று கூறுகின்றனர் மணல் தொழில் வலம் வருபவர்கள். கிராவல் மண் தொழில் நடத்துபவர்கள் எங்களுக்கு வேலை வேண்டும் எங்களுடைய வாழ்வாதாரம் கெட்டுப் போய்விட்டது என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று மனு கொடுத்து போராட்டமும் நடத்திவிட்டனர்.ஆனாலும் இன்று வரை தஞ்சையில் மட்டும் கிராவல் தொழில் நடக்கவில்லை நடக்கவும் தலைமையில் உள்ள அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதுதான் என்ன காரணம் என்று புரியாமல் ஒட்டுமொத்த கிராவல் தொழிலதிபர்களும் குழப்பத்தில் நிற்கின்றனர். இந்த தொழிலை
தடுப்பது தஞ்சை சுரங்கத்துறை அதிகாரிகளா இல்லை தலைமையில் உள்ள கட்சி பிரமுகர்களா இல்லை சென்னையில் உள்ள சுரங்கத்துறை அதிகாரிகளா என்பது தெரியாமல் இன்றும் புலம்பி வருகின்றனர் கிராவல் குவாரிகள்
நடத்தும் தொழிலதிபர்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம் ராஜப்பாவின் ராஜதந்திரம் தஞ்சையில் எடுபடுமா என்று.
செய்தி – செந்தில்நாதன்