ஓசூர் ஜூலை 21
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஓசூரில் நடைபெற்று வரும் 14வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரும் மகிழ்வோடு கலந்து கொண்டனர், தங்களது பள்ளியின் நூலகத்திற்கு ஆசிரியர் பெருமக்களின் பெரும் உதவியோடும் தன்னார்வலர்களின் உதவியோடும் ரூபாய் 21,498/-க்கு அரிய நூல்களை வாங்கி புத்தக வாசிப்பின் நன்மைகளை மற்றவர்களும் அறியும் வண்ணம் செயல்பட்டனர், மேலும் தங்களுக்குத் தேவையான நூல்களை தங்களின் சேமிப்பிலிருந்து ரூபாய் 3000 மதிப்பிலான புத்தகங்களை வாங்கினர். மாணவ, மாணவிகளின் புத்தக வாசிப்பின் மேலிருந்த ஆவலை இந்த செயல் பிரதிபலிப்பதாக அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

மூக்கண்டபள்ளி அரசு உயர்நிலை ப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி. ராணி மங்கலம் தலைமையில், ஆசிரியை திருமதி. ஹெலன் ஜாஸ்மின், சுதாகர், சுகந்தராஜன் மற்றும் ஆர்.சரவணன் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி 230 மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற செஸ், ஓவிய போட்டி, கதை எழுதும் போட்டி ஆகிய நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு செஸ் போட்டியில் முதல் பரிசும் ஓவியப் போட்டியில் மூன்றாம் பரிசும் வென்று அசத்தினர். அந்தப் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கூறும் பொழுது எங்கள் பள்ளி ஓசூர் பகுதியில் ஒரு முன்னணி உயர்நிலை பள்ளியாக மிளிர வேண்டும் என்கின்ற ஆவலை மகிழ்வோடு தெரிவித்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
ஓசூர்