திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் 40-வது மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக நுகர்வோர்களுக்கு பால் விலையை 3 ரூபாய் குறைத்ததோடு, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, 3.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு நாளொன்றுக்கு 1.10 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியதற்காக முதலமைச்சருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றிகளை சங்கத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், சந்திரசேகரன், கார்த்திக், வெங்கடேசன் உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தையும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாநில தலைவர் சிவ இளங்கோ படத்தையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பேட்டி. அமிர்தகுமார் (மாநிலத் தலைவர்)

