திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,
பொன்னுசங்கம்பட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 29.97 இலட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணியினையும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியினையும்,
நடுவலூர் ஊராட்சியில் ரூபாய் 22 இலட்சம் மதிப்பீட்டில் பொது நூலக கட்டிடம் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், நடுவலூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 9.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும்,
நடுவலூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினையும்,
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சிங்களாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் செயல்பாடுகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சிங்களாந்தபுரம் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்