மது பாட்டில்களை டாஸ்மாக் கடையில் திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய் தரப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பல மாவட்டங்களில் இதனை செயல்படுத்த முயற்சி டாஸ்மாக் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர்கள் இந்த பத்து ரூபாய் பாட்டிலுக்கு நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.

எங்களை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டோம். அதற்கென்று தனி நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மார்க் கடை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மது பிரியர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் போக்கு பல இடங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.