ஒரத்தநாடு திருவோணம் அருகே பட்டா மாறுதல் வழங்கியதில் முறைகேடு நெய்வேலி தென்பாதி கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட நெய்வேலி தென்பாதி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், பட்டா மாறுதல் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 9ம் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சமூக நீதிக் கழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் மீது சமூக நீதிக் கழகம் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், உயர் அதிகாரியிடம் புகார் மனுக்களை நேரில் கொடுத்து இருந்தார் இந்த புகார் குறித்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், விரைந்து விசாரணை நடத்தினார் இதில் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், பட்டா மாறுதலில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி தென்பாதி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு பனித்தன்மை குறைவு, மற்றும் நெய்வேலி தென்பாதி வருவாய் கிராம கணக்குகளை ஒப்படைக்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கிராம நிர்வாக அலுவலர் பழனிவேலை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர், நேற்று உத்தரவிட்டார் விஏஓ கதறல் ஆடியோ
விஏஓ பழனிவேல் மற்றும் புகார் அளித்தவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது அதில் கூடிய விரைவில் உங்கள் பெயருக்கு மீண்டும் பட்டாவை மாற்றி தர முயற்சி செய்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மண்டல துணை வட்டாட்சியருக்கும் ( ஜோனல்) தாசில்தார் அழுத்தம் கொடுத்தார் அதனால் தான் தவறு நடந்தது என்று கதறி உள்ளார் மேலும் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் துவங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் தொடர்ச்சியாக பட்டா மாறுதல் பல்வேறு முறைகேடான சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை தனிக் கவனம் செலுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்,