Tuesday, December 2, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedநெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய தமிழக அரசியல் களம்(இதற்க்கிடையில் பேசுபொருளாக மாறியுள்ள (S.I.R)

நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய தமிழக அரசியல் களம்(இதற்க்கிடையில் பேசுபொருளாக மாறியுள்ள (S.I.R)

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் நகர்வு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் . அந்தந்த கட்சி தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர் மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தான திட்டங்களை முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து வருகின்றனர்.இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கேட்டிருந்த நிலையில் அதற்கு திமுக சார்பில் விரைவில் இறுதி கட்டமாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது. மற்றும் குறிப்பாக பேசுபொருளாக மாறியுள்ள ( S.I.R ) .கடந்த வாரம் தமிழகத்தில் SPECIAL INTENSIVE REVISION வாக்காளர் சரிபார்க்கும் பணிகளானது தொடங்கி வீடுவிடாக நடைபெற்று வரும் நிலையில்.பல்வேறு குளறுபடிகள் (S I.R) திட்டத்தில் நடைபெறுவதாகவும் மற்றும் அதற்கு எதிராகவும் .குரல் எழுப்பி வரும் ஆளும் கட்சிகளும் மற்றும் பல மாநில கட்சிகள் தங்களின் எதிர்பினை பதிவு செய்து வருகின்றன இதற்குகிடையில் திமுக சார்பில் (S.I.R)க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்து யிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் சில புதிய கட்சிகள்.கரூர் சம்பவத்தையும் தற்போது பேசுபொருளாக இருக்கும் (S.I.R)யும் தொடர்புபடுத்தி சில புதிய கட்சி பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .மற்றும் பல முன்னணி ஊடகங்கள் 2026ல் ஆட்சியில் அமரபோவது யார் என்பது தொடர்பான கருத்து கணிப்பையும் நடத்தி வருகின்றனர் …..

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

(க. தங்கமணி) தஞ்சாவூர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments