எல் கணேசனின் 91 – வது பிறந்தநாள் விழா நேற்று தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய திமுகவினர் மத்தியில் கொண்டாடப்பட்டது. இதில் நேற்று மதியம் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் களிமேடு செல்வம், மேயர் சண். ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட பலரும் அவரிடம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஒருவர் எல்.ஜி.யிடம் வாழ்த்துக்களை சொன்ன பிறகு நாடும் நமதே நாற்பதும் நமதே என்று சொல்ல அதனை மாற்றி புரிந்து கொண்ட எல். கணேசன் “நாடு பாதி நாட்டார் பாதி” என்று சொல்ல அந்த இடம் கலகலப்பானது
உடனே அங்கிருந்த மேயர் சண்.ராமநாதன் நானும் நாட்டார் தான் என்று சொல்ல இன்னும் அந்த இடம் படு கலகலப்பானது.
உடனே இதில் கடுப்பான மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகர் ஒரு இடத்தில் வாண்டையார், தென்கொண்டார், சோழகர், என யார் ஒருவர் எந்த இடத்திலும் இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது ஆனால் நாட்டார் ஒருவர் இருந்தால் போதும் அந்த இடமே நாசமாகிவிடும் என்று சொல்ல அவர் யாரையோ (குறிப்பிட்ட ஒருவரை) சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்ட கழகத்தினர் அமைதியாக இருந்து கொள்ள அங்கிருந்தவர்கள் சரி வேண்டாம் ஜாதியை பற்றிய பேச்சு என்று சொல்ல கொஞ்ச நேரம் அந்த இடம் அமைதியானது. பிறகு அனைவரும் எல். கணேசனை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து சென்றனர். பிறந்த
நாளிற்கு வந்த இடத்தில் பகுத்தறிவு பேசும் கட்சியினர் ஜாதிய பெருமைகளை பேசும் இவர்கள் தான் பகுத்தறிவு பகலவர்களின் வாரிசுகளா.?
அதேபோல டி.சி. சொல்ல வருவது யாரை பற்றி என்று தெரிந்து கொள்வார்களே ஆனால் அவர்கள் உண்மையிலே அறிவாளிகள் தான்.
செய்தி – கார்த்திக்