கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி, பேரிகை, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. மேக மாறுபாடு காற்றின் சுழற்சி காரணமாகவும் ஒடிசா பகுதிகளில் உருவாக்கி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் பெய்கின்ற மழையானது தமிழகம் முழுவதும் பரவலாக பெய்கிறது இன்று ஓசூர் பகுதிகளில் மாலை ஆறு மணியிலிருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது ஆங்காங்கே மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது பேருந்து நிலையம், ஜிஆர்டி, பாகலூர் சாலை, ராயக்கோட்டை சாலை அமிரியா பெட்ரோல் பங்க் பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்